கனமழை அலர்ட்…2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை : உங்க மாவட்ட நிலவரம் தெரியுமா?

Author: Rajesh
11 April 2022, 8:53 am

கனமழை காரணமாக நாகை, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக-வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் சில இடங்களில் வெப்பநிலை சற்று குறைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களான ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளை முதல் 14ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நாகை மாவட்டத்தில் 1 – 9ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 1356

    0

    0