திருப்பூரில் பனியன் நிறுவன சூப்பர்வைசர் கொலை வழக்கில் வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியில், ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் கிடப்பதாக அப்பகுதி மக்கள் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மீட்டு, 108 ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த 15 வேலம்பாளையம் போலீசார், நடத்திய விசாரணையில் கத்திக் குத்துப்பட்டு இறந்த நபர் திருமுருகன்பூண்டியை அடுத்த துரைசாமிநகரை சேர்ந்த கோபி கிருஷ்ணன் (வயது 39) என்பதும், அவர் ஆஷர்நகர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும் கோபி கிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது அவர் பெற்றோருடன் வசித்து வந்ததும் தெரிந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த கோபி கிருஷ்ணனுக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒரு ஆபாச செயலியில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக தேடுதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த செயலி மூலமாக கோபி கிருஷ்ணனை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.
மேலும் அவரை 15 வேலம்பாளையத்தை அடுத்த எடிசன்நகர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அந்த வாலிபர் கூறி உள்ளார். இதையடுத்து கோபி கிருஷ்ணன் தனது தாயிடம் ஏ.டி.எம்.-ல் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார்.
பின்னர் ஆபாச செயலியில் வாலிபர் கூறிய இடத்திற்கு கோபி கிருஷ்ணன் சென்றுள்ளார். அங்கு இருந்த 2 வாலிபர்களுடன் அவர் மது குடித்து விட்டு தனித்தனியாக ஓரினச் சேர்க்கையில் கோபி கிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.
இதன் பின்பு அந்த வாலிபர்கள் இருவரும் கோபி கிருஷ்ணனிடம் ரூ.17 ஆயிரம் பணம் தருமாறும், அதை கூகுல் பே மூலமாக அனுப்புமாறும் கூறி உள்ளனர். இதையடுத்து பணத்தை அனுப்புவது போல அனுப்பிய கோபி கிருஷ்ணன் கூகுல் பேக்கான ரகசிய எண்ணை தவறாக போட்டுள்ளார்.
3 முறை தவறாக போட்டதால் அவருடைய கூகுல் பே கணக்கு பூட்டப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்களில் ஒருவர் மது பாட்டிலால் கோபி கிருஷ்ணன் தலையில் அடித்துள்ளார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டி உள்ளது.
அதோடு நிறுத்தி விடாமல் 2 பேரும் சேர்ந்து கத்தியால் அவருடைய கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த நிலையில்தான் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கோபி கிருஷ்ணன் எடிசன்நகர் பகுதியில் கிடைந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த 15 வேலம்பாளையம் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோபி கிருஷ்ணனை கொலை செய்தது மதுரையை சேர்ந்த விக்னேஷ் (எ) மருதுபாண்டி (23), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பரணிதரன் (26) என்பது தெரிய வந்தது.
அவர்கள் இருவரும் தற்போது திருமுருகன்பூண்டி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், ஆபாச செயலி மூலமாக கோபி கிருஷ்ணனை வரவழைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் விக்னேஷ் (எ) மருதுபாண்டி, பரணிதரன் ஆகியோர் பிள்ளையார்பட்டி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் ஏற்கனவே வழக்கு இருப்பதாகவும், விக்னேஷ் மருதுபாண்டியுடன் கோபி கிருஷ்ணன் ஏற்கனவே பலமுறை ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
திருப்பூரில் பனியன் நிறுவன சூப்பர்வைசருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, பணம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.