திமுக எம்எல்ஏ மனைவிக்கு மட்டும் எப்படி? தேர்தல் ஆணையம் ஆதரவா? BJP சூர்யா சிவா கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 5:07 pm

திமுக எம்எல்ஏ மனைவிக்கு மட்டும் எப்படி? தேர்தல் ஆணையம் ஆதரவா? BJP சூர்யா சிவா கேள்வி!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் சார்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வாக்களிக்க ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு பகுதிகளிலும் உரிய தகுதி இருந்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்ட விஷயம், தேர்தல் ஆணையத்தின் மீது கோபத்தை கொப்பளிக்க வைத்துள்ளது.

பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இல்லை என வேதனை தெரிவித்தனர். மதுரையில் நடிகர் சூரி, தனது மனைவிக்கு ஓட்டு இருக்கு ஆனால் தன்னுடைய பெயர் இல்லை, அடுத்த முறை நிச்சயம் இருக்கும் என நம்புகிறேன் என வருத்தத்துடன் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இப்படி பிரபலங்கள் முதல் பொதுமக்கள் பலரது ஓட்டுக்கள் வீணாகி போனது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தன. தேர்தல் ஆணையம் இந்த முறை தேர்தல் பணியில் தோற்றுவிட்டது என கருத்து தெரிவித்திருந்ததும் கண்கூடு.

மேலும் படிக்க: பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? Ilayaraja தரப்புக்கு High Court கேள்வி!

ஆனால் தற்போது, தமிழக பாஜக ஓபிசி அணியின் பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவா எழுப்பிய கேள்வி தேர்தல் ஆணையத்தை தலைகுனிய வைத்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தேர்தல் சமயத்தில் அதிகாரிகளை மாற்றாமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று

ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் அவர்களின் மனைவி மாலதி என்பவர் இரண்டு பூத்துகளில் தன்னுடைய வாக்கை பதிவு செய்ததற்கான சான்று நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? என தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்திற்கும், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் டேக் செய்துள்ளார்.

திமுக எம்எல்ஏவின் மனைவிக்கு மட்டும் 2 பூத்களில் வாக்கு உள்ளது என்பது வாக்களிக்க தகுதியிருந்து பெயரில்லாத வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?