மனைவியை கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோவிலில் அனுமதிக்கலாம்? பாஜக மூத்த தலைவரின் ட்வீட்டால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 9:26 pm

மனைவியை கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோவிலில் அனுமதிக்கலாம்? பாஜக மூத்த தலைவரின் ட்வீட்டால் பரபரப்பு!!

ராமர் கோயில் பூஜைகளில் மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி அனுமதிக்க முடியும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ‘ ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டவர்.

அப்படிப்பட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனவரி 22-ம் தேதி நடைபெற இருக்கும் பூஜையில், பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் பாலிவுட் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?