அண்ணாமலைக்கு ரூ.30 கோடி பணம் எப்படி வந்துச்சு : சேர்த்து வைத்த பணமா? அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan20 March 2023, 5:00 pm
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய தலைமை கூட்டணி குறித்து முடிவு செய்யும். நான் எனது நிலைபாட்டில் உறுதியாக உள்ளேன். பணம் இல்லாமல் அரசியல் செய்ய வேண்டும்.
போலீஸ் அதிகாரியாக சிறுக சிறுக பணம் சேர்த்து அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து இப்போது கடனாளியாகிவிட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்து உள்ள பேட்டியில், ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னார்களே. அண்ணாமலையை சந்தித்து அந்த 15 லட்சத்துக்கான வட்டியையும் சேர்த்து போட சொல்லுங்க.
மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் மிகத்தெளிவாக இந்த பட்ஜெட்டில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. கடனாளியாக இருக்கிறேன். சிறுக சிறுக சேர்த்த பணத்தை எல்லாம் சேர்த்து செலவு பண்ணிட்டேன். கடனாளி ஆகிவிட்டேன் என்று சொன்னதாக பார்த்தேன்.
நீங்கள் கேட்டு இருப்பீர்கள். எனக்கு தெரிந்து 8, 9 ஆண்டுகளில் எந்த காவல்துறை அதிகாரியும் ரூ.30 கோடியை சம்பளம் வாங்கி சேர்க்க முடியாது.
அரவக்குறிச்சி தேர்தலில் அவரது செலவு ரூ.30 கோடி என்று நான் நினைக்கிறேன். அதில் ஒரு சீட்டு வந்தது. அதில், சொந்த நிதி எவ்வளவு என்று பார்த்தால் NIL என்று இருந்தது.
ரூ.30 கோடி செலவு அவருக்கு. தேர்தலில் அரவக்குறிச்சி வாக்காளர்களுக்கு ரூ.1,000 பணத்தை கொடுத்தார் நீங்கள் சொன்ன நபர்.
அதெல்லாம் காவல் அதிகாரியாக இருந்து கர்நாடகாவில் சிறுக சிறுக சேர்த்த பணம். அதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர் கணக்கில் இருந்து எவ்வளவு செலவு செய்தார்? நண்பர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்? உறவினர்கள் எவ்வளவு கொடுத்தார்கள்? என்பதை பார்க்க வேண்டும். தடம் மாறி செல்ல வேண்டாம். அதை தனியாக ஒருநாளில் பேசுவோம் என்றார்.