சாவர்க்கரை தாங்கும் கூட்டம் எப்படி சங்கரய்யாவை போற்றும்… ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த விசிக பிரமுகர்!!
திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினரின் ஆய்வு மேற்கொள்வதற்காக திருச்சிக்கு வருகை தந்தனர்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு திருச்சியில் திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாநகர மாவட்ட செயலாளர்கள் புல்லட்லாரன்ஸ், கனியமுதன், தெற்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு மற்றும் கட்சியினர் சிறுத்தைசரவணன், ஜெயக்குமார், காட்டூர் பெரோஸ்கான், ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற மாபெரும் வீரர், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் சங்கர்யயா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டுவிட்டு அதே பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தது இருப்பதாக அறிவித்திருக்கிறார் வரவேற்கத்தக்கது.
ஆளுநர் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரையாவை கண்டு ஏன் அச்சம் வருகிறது என்றால் விடுதலை போராட்டத்தில் ஆர்.என்.ரவியின் பரம்பரைக்கு, அவர்களுடைய இயக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு எந்த தொடர்பும் இல்லை விடுதலையை கொச்சைப்படுத்தியவர்கள். போற்றப்படுகிற சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு காட்டிக் கொடுத்த வரலாற்றுக்குரியவர்கள்.
எனவே போலி போராளிகளுக்கு உண்மை போராளிகளை கண்டால் அச்சம் வரத்தான் செய்யும். எனவே, சங்கரையா அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் ஆர்.என்.ரவி நடந்து கொள்கிறார்.
அவர்கள் சாவர்க்கரை போற்றுகிறவர்கள் சாவர்க்கரை மரியாதை செய்கிறவர்கள் சங்கரையாவுக்கு இப்படி செய்வது ஒன்றும் வியப்பில்லை இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் அமைச்சருடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது ஒட்டுமொத்த பல்கலைக்கழகம் மாணவர்களும் இதனை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கிறது மாணவர்களும் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் தொடர்ந்து தமிழ்நாட்டினுடைய ஆளுநர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு பாஜகவின் அலுவலகமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்.
இதை தான் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்போது தமிழ்நாடு முதலமைச்சரும் அதை சொல்லி இருக்கிறார். ஆர்.என்.ரவியை எதிர்த்து தமிழகம் அறவழியில், ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடும் அவருக்கு தக்க பாடத்தை புகட்டும் என தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.