தோண்ட தோண்ட மனித உடல்கள்.. கண்ணீரில் கடவுளின் தேசம் : செய்தியாளர் சந்திப்பில் கலங்கிய முதலமைச்சர்!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2024, 8:18 pm
கேரள இன்று நிலச்சரிவு ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடும் சவாலுக்கிடையில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கேரள மாநில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணி சிக்கலாக உள்ளது. மேப்பாடி மருத்துவமனையில் 62 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.
42 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.எதிர்பாராமல் நடைபெற்ற நிலச்சரிவு.
மேக வெடிப்பு மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் நிலச்சரிவு அபாய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் இதுவரை காணாத பேரிடர் நிகழ்ந்துள்ளது.
நிலச்சரிவில் ஒரு பள்ளி முழுயைாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கூறினார்.