கேரளாவில் இருந்து மனித உடல் பாகங்கள் காரில் கடத்தல்… சோதனை செய்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தேனியை உலுக்கிய சம்பவம்…

Author: Babu Lakshmanan
5 August 2023, 12:48 pm

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சல் செய்து காரில் கடத்திய கும்பல் நரபலி கொடுக்கப்பட்டதா?? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதிலிருந்து நான்கு பேரும் முன்னுக்கு பின் முரணாக சந்தேகப்படும் படியாக கூறியதால், அவர்களை காருடன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் மூன்று பேர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் வைத்திருந்த பையை பிரித்து சோதனையிட்டதில் நாக்கு, மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்பு பாகங்கள் தனித்தனியாக பிளாஸ்டிக் கவரில் பார்சலாக சுற்றி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, அது விலங்குகள் உடையதா..?? இல்லை மனிதன் உடையதா..?? என தெரியவில்லை.

இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உடல்உறுப்பு பாகங்கள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இது மனித உறுப்பு என்றால் நரபலி கொடுக்கப்பட்டதா..?? என போலீசார் தீவிர விசாரணை ஒருவர் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே போலீசாரால் நரபலி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீது ஏற்கனவே மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு மோசடி செய்ததாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, யாரேனும் கொலை செய்து நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை விற்பனைக்காக கொண்டு சென்றார்களா..?? அல்லது இது விற்பனை செய்ய எடுத்து சென்றார்களா?? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற மூவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அவர்கள் வந்த கார் TN 67 AR 3641 பதிவு எண் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்தது என்றும், இது குறித்து தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், தேனி மாவட்டத்தில் உடல் உறுப்புக்கள் காரில் பார்சல் செய்து கடத்தியது பெரிதும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0