அதிகாரப்பசி.. மனிதராக இருக்க தகுதியற்றவர் மோடி : நடிகர் கிஷோர் காட்டமான விமர்சனம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 11:23 am

அதிகாரப்பசி.. மனிதராக இருக்க தகுதியற்றவர் மோடி : நடிகர் கிஷோர் காட்டமான விமர்சனம்..!!

தமிழ், கன்னடம் உள்பட பல்வேறு மொழி சினிமாக்களில் நடித்து வருபவர் நடிகர் கிஷோர். குறிப்பாக நல்ல கதையை தேர்ந்தெடுத்து மட்டும் நடித்து வரும் இவரின் கதாபாத்திரங்கள் எப்போதும் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்தது முதலே நடிகர் கிஷோர், பிரதமா மோடி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் கிஷோர் தற்போது தடித்த வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், பிரதமர் மோடியின் பேச்சு 2 பாகங்களாக உள்ளது. இந்து மதத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி மே 14, மே 15 ஆகிய தேதிகளில் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.

அதில் நடிகர் கிஷோர், ஆமாம். அவர் (பிரதமர் மோடி) பொது வாழ்க்கைக்கு பொருத்தமானவர் இல்லை. அவர் மனிதனாக இருக்க தகுதியில்லாதவர். அவரை போன்ற ஒருவரின் வாய் மரியாதை மிக்க கடவுள் ராமரின் பெயரை உச்சிப்பது என்பது பாவச்செயல். உண்மைக்கு புறம்பான, நெறிமுறையற்ற கருத்துகளை கூறுவதால் அவர் வெட்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க: கனமழையால் வெள்ளத்தில் மிதந்த வீடுகள்.. புகார் அளித்தும் யாரும் வராததால் தூய்மை பணியாளராக மாறிய மக்கள்!

அவரது வார்த்தைகள் மற்றும் செயல்பாடே உலகில் தன்னை விட பெரிய பொய்யர், பெரிய கோழை, மூர்க்கவாதி, மோசமானவர், கொடூரமானவர், முட்டாள், உணர்வற்றவர், கண்ணியமற்றவர், மக்களுக்கு எதிரான ஆட்சி செய்பவர், ஆபத்து நிறைந்தவர், ஊழல் நிறைந்த எதேச்சதிகாரி இல்லை என்பதை காட்டும்.

10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த பிறகும் கூட விவசாயிகள், ராணுவம், பெண்கள், குழந்தைகள், மருத்துவமனைகள், கல்லூரிகளை மேம்படுத்த செயல்படுத்திய திட்டங்கள் பற்றி பேசாமல் பொய்களை கூறி வெறுப்புகளை மட்டும் விதைக்கிறார்.

மேலும் கற்பனையான ஷரியா வரிகள், வாக்கு ஜிகாத், இந்த நாட்டு மக்களை ஊடுருவல்காரர்கள் என்று சொல்வது, பிற கட்சியை சுட்டிக்காட்டி அவர்கள் உங்கள் வீடு, எருமை, சைக்கிள் உள்ளிட்ட சொத்துகளை எடுத்து கொள்வார்கள், கோவில்களை பூட்டிவிடுவார்கள் என்று பேசி வருகிறார்.

இப்படியான அதிகாரப்பசி மற்றும் போலி இந்துவாக நடந்து கொள்வதால் இஸ்லாம் எப்படி பயங்கரவாதிகளால் இழிவுப்படுத்தப்பட்டதோ அதேபோல் அவரால் இந்து மதம் இழிவுப்படுத்தப்படலாம் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

  • Jailor 2 cast and crew ஜெயிலர் 2-வில் சிவராஜ்குமாருக்கு பதில் இவரா…ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்..!