சென்னையில் கணவன் ஆணவக்கொலை செய்யப்பட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மூன்றாமாண்டு கல்லூரி படிக்கும் மாணவி, அதே பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி பிரவீன், தனது வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெளியில் சென்றுள்ளார். வெளியில் சென்ற பிரவீனை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாங்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை
மருத்துவமனையில் அனுமதித்ததும், பிரவீன் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து தாம்பரம் காவல்துறையினர் கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், கொலை செய்தது ஷர்மிளாவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் என்றும், மாற்று சமூகத்தை சேர்ந்த பிரவீன் தனது தங்கையை திருமணம் செய்த காரணத்தால் நடைபெற்ற கொலை என்பதால் ஆணவக்கொலையாக பிரவீன் மரணம் வழக்கு பதிவு செய்தனர்.
கொலை செய்த ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரவீன் இறந்த தூக்கம் தாளாமல் சர்மிளா வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார். இதில் கழுத்து நரம்புகள் உடைந்த நிலையில் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனல் சிகிச்சை பலனின்றி கோமாவில் இருந்த ஷர்மிளா நேற்று உயிரிழந்தார்.
அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், தன் கணவர் இல்லாத உலகில் நானும் இருக்க மாட்டேன் என்றும், தன் சாவுக்கு தனது குடும்பத்தினர் தாய், தந்தை, சகோதரர்கள் தான் காரணம் என்றும் தந்தை துரை, தாயார் சரளா, அண்ணன்கள் நரேன், தினேஷ் ஆகியோர்தான் காரணம் என்று அதில் குறிப்பிட்டு உள்ளார் ஷர்மிளா.
ஏற்கனவே ஷர்மிளாவின் அண்ணன் மற்றும் நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பெற்றோர்கள் மீதும் வழக்கு விசாரணை பாய்ந்துள்ளது.
இந்த நிலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சற்று நேரத்தில் நடக்கும் ஷர்மிளாவின் உடலின் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஷர்மிளாவின் மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களிடம் பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளையில், இந்த விவகாரத்தை சிபிசிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.