ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறு.. அலட்சியமாக இருக்காதீங்க முதல்வரே : இபிஎஸ் வலியுறுத்தல்!!
ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க கோரிய ஒஎன்ஜிசியின் அனுமதியை நிராகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் X தளபதிவில் கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அம்மா அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.
இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவர்களது முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்துபார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு.
ஆகவே கடந்த காலத்தை போல முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஒஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
This website uses cookies.