அன்பை, பண்பை, அறிவை, வளத்தை தந்த எந்தையர் மட்டுமல்ல அனைத்து தந்தையரையும் வணங்குகிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!!
Author: Udayachandran RadhaKrishnan19 June 2022, 12:40 pm
ஓவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், மகன்கள், மகள்கள் தங்களது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,தந்தையர் தினமான இன்று தனது தந்தையை நினைத்து வணங்குவதாகவும்,எல்லார் தந்தையரையும் வாழ்த்துவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக,முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்.அதன்படி,தந்தையர் தினமான இன்று எந்தையை நினைத்து வணங்குகிறேன்.எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.