நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2024, 11:55 am
நான் லேகியம் விற்பவன்தான்… பீடை பிடித்த திராவிட கட்சிகளை அகற்ற வேண்டிய காலம் இது : அண்ணாமலை காட்டமான விமர்சனம்!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி மீஞ்சூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் P. செந்தில்குமார் தலைமையில் வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்பதை வலியுறுத்தும் விதமாக என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்ட போது போலீசார் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மீஞ்சூர் சாலையில் யாத்திரைக்கு தடை விதித்து பேசுவதற்கு மட்டுமே அனுமதி அளித்தனர் .
பரதம் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுடன் பாஜக தலைவர் அண்ணாமலையை உற்சாகமாக மலர் தூவி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்றனர்.
பின்னர் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாமலை பேசுகையில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களது கடைசி இதுதான்
என்றும், இந்தியாவை வடக்கு தெற்கு என பிரித்து பார்க்க வேண்டும்
அதில் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்
முதலமைச்சர்கள் சென்று டெல்லியில் ஆர்பாட்டம் நடத்துவது போன்ற மோசமான அரசியலை இந்திய வரலாற்றில் நான் பார்த்தது கிடையாது என்றும், நிதி பகிர்வு பற்றி கிளிப்பிள்ளை போன்று தமிழக முதல்வர் பேசுகிறார் என்றும் காங்கிரஸ் ஆண்டகாலத்தை விட பாஜக ஆட்சியில் தான் 192 சதவீதம் கூடுதலாக நீதி பங்கீடு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகவும், இந்தியாவை வடக்கு தெற்கு என பிரித்து பார்க்க வேண்டும் அதில் அரசியல் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் செயல்பாடு சரியில்லை அவர்களுக்கு சீட்டு வழங்காதீர்கள் என காங்கிரஸ் கட்சியினரே கூட்டம் போட்டு ஆங்காங்கு பேசி வருவதாகவும், தமிழகத்தில் திமுகவின் பஜனை கோஷ்டியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
நான் லேகியம் விற்பவன் தான் திராவிடகட்சிகள் என்ற பீடையை தமிழக மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டிய காலம் இது என்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்கவில்லை என்றால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல இருக்காது என்பது அவர்களுக்கு தெரியும் அவர்களது கடைசி இதுதான் என்றும் பாஜக ஊழலை எதிர்த்து பேச ஆரம்பித்ததற்கு பிறகு பங்காளி கட்சிகளுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்எம்ஆர் .ஜானகிராமன், பட்டியல் அணி மாநிலத் துணைத் தலைவர் அன்பாலயா S. சிவக்குமார் மாவட்ட செயலாளர் T.நந்தன் தாமரைசோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.