நான் பாஜகவில் தான் இருக்கிறேன்… 2026ல் அண்ணாமலை தான் முதல்வர் : சூர்யா சிவா பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2023, 5:24 pm

மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற ரவுடி மீது வழக்கு பதிவு என செய்தி வெளியானது.

இது சம்பந்தமாக வரிச்சியூர் செல்வம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித பேட்டியில், என்னை ரவுடி என்று கூற வேண்டாம் கோமாளி என்று கூறினால் சந்தோஷப்படுவேன் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திருச்சி பாஜக ஓபிசி அணியின் முன்னாள் மாநில செயலாளர் சூர்யாசிவா அவரது ட்விட்டர் பக்கத்தில் என்னை ரவுடி என பதிவு செய்திருந்தார். அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்டார் என பேட்டியளித்தார்.

இது தொடர்பாக இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சூர்யாசிவா, எனது டிவிட்டர் பக்கத்தில் வரிச்சூர் செல்வமும், காயத்ரி ரகுராமனும் இரவு நேரத்தில் ஒரு தோப்பில் சந்தித்ததாகவும்
நான் பதிவிட்டிருந்தேன்.

இது தொடர்பாக எந்த செய்தியில் அவரிடம் கேட்கவில்லை அவராகவே சூர்யா சிவா என்னிடம் பேசி மன்னிப்பு கேட்டார் பின்னாடி எடுத்து விட்டார் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக மன்னிப்பு கேட்டார் என்று செய்திகள் வருகிறது. அந்த பேட்டியை பார்க்கவில்லை இரண்டு நாட்கள் பிறகு அவர் எனக்கு ஒரு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.

அதில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரியாமல் கூறிவிட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். நான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் எனக்கூறி அதற்கான ஆடியோவை யும் வெளியிட்டார்.

பாஜகவில் நான் ராஜினாமா கடிதம் கொடுத்ததிலிருந்து தொடர்ந்து திமுக எதிர்ப்புகளை பதிவு செய்து தான் வருகிறேன். நான் திமுகவில் இணையும் அவசியம் இல்லை.

நான் இன்று வரை பாஜ.க பிரமுராக தொடர்கிறேன். எனது ராஜினாமாவை பாஜ.க.தலைமை இன்னும் எற்றுக்கொள்ள வில்லை. 2026ம் வரை அண்ணாமலை பாஜக தலைவராக இருப்பார்.

அப்போது தனிப்பெருபான்மையுடன் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கும்.
அப்போது அண்ணாமலை தான் முதல்வர் என தெரிவித்தார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?