நான் ஒண்ணும் உங்க வேலைக்காரன் கிடையாது : அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளியிடம் கடிந்து கொண்ட திமுக கூட்டணி எம்எல்ஏ ஆடியோவால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 1:30 pm

அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளிடம் நான் உங்கள் வேலைக்காரன் கிடையாது உங்களால் முடிந்தவற்றை பார்த்துக் கொள்ளுங்கள் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சால் சர்ச்சை.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி தாயல்பட்டி பகுதியில் வசித்து வருபவர் திருமலை குமார். 60% வரை மாற்றுத்திறனாளி ஆனவர் பாண்டீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் இவர் அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்திற்காக பல முறை விண்ணப்பித்துள்ளார். கடந்த மாதம் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் மாற்றுத்திறனாளி தனக்கு மூன்று சக்கர வழங்க வேண்டும் எனக் கூறி அவரிடம் மனு அளித்துள்ளார்.

மனு கொடுத்து இருபது நாட்களுக்கு மேலாக ஆகிய நிலையில் சட்டமன்ற உறுப்பினரிடம் மாற்றுத்திறனாளி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது, நான் உங்க வேலைக்காரன் கிடையாது, அதிகாரிகள் உடனே எந்த வேலையையும் செய்வதில்லை, யாரையாவது வைத்து இந்த வேலையை பார்த்துக் கொள்ளுங்கள், அதிகரி என சட்டமன்ற உறுப்பினர் ரகுராம் பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து மாற்றுத்திறனாளி திருமலை குமாரிடம் கேட்டபோது, மாற்றுத்திறனாளியாக உள்ள தாங்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே அரசின் நலத்திட்டத்தின் கீழ் மூன்று சக்கர வாகனத்தில் விண்ணப்பித்ததாகவும் கிடைத்தால் அந்த வாகனம் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என நம்பியதாகவும் சட்டமன்ற உறுப்பினர் இத்தகைய பேச்சு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராம் கேட்ட போது, அந்த ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் தான் எனவும். மனுக்கள் வருகிறது அது குறித்து பதில் தாங்கள் தெரிவிப்பதாகவும் மக்களுக்கு புரியவில்லை எனவும் பொறுப்பில்லாமல் தெரிவித்துள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 584

    1

    0