உயிரை விட தயாராக உள்ளேன்… தொண்டர்கள் மத்தியில் பாமக நிறுவன் ராமதாஸ் உருக்கமான பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 6:38 pm

இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்: பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அனைத்து நிர்வாகிகளுக்கும் கொடுத்த குறிப்பேடுகள் பிரசாந்த் கிஷோரிடம் கொடுத்திருந்தால் இந்தியா மட்டுமல்ல உலகத்துக்கே கொடுத்திருப்பார்.

இதை யார் உனக்கு கொடுத்தார்கள் என்று கேட்டால் தமிழகத்தில் ராமதாஸ் என்பவர் கடனாக கொடுத்தார் என்று கூறியிருப்பார் என்றும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கௌரவத்தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச் செயலாலர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய மந்திரி மூர்த்தி வழக்கறிஞர் பாலு, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ