வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டது என நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்.. அமைச்சருக்கு அண்ணாமலை சவால்!!

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து தேசிய மகளிர் அணி தலைவரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பழனி பாதயாத்திரை சென்றார்.

இந்த பாத யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்பு வானதி பேசும்போது, தைப்பூசத் திருவிழா என்பது காலம் காலமாக நடக்கிறது. எனக்கு இந்த வருடம் முருகன் ஆசி கொடுத்துள்ளார். நாட்டு மக்கள் நலமுடன் வாழ வேண்டும். இன்று வந்துள்ள அண்ணாமலைக்கு நன்றி. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் அண்ணாமலை வானதி சீனிவாசனை பாதயாத்திரைக்கு வழி அனுப்பினார். தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, புனித யாத்திரையை வானதி ஈச்சனாரியில் இருந்து ஆரம்பிக்கிறார். கொங்கு பகுதியில் இருந்து பாஜக வளர 3 நாட்கள் நடை பயணமாக பழனி செல்கிறார். இதயம் கணக்கிறது. அக்கா 150 கிலோ மீட்டர் நடக்கிறார். அதிக உறுதியுள்ள பெண்மணி. நான் வெளியில் இருந்து ரசித்து பார்த்துள்ளேன். அவருக்கு போகும் வழியில் வரவேற்பளிக்க தயாராக உள்ளார்கள். சரித்திர பயணமாக புனித பயணம் இருக்கும் என்றார்.

பின்னர் அண்ணாமலை தொடர்ந்து பேசும்போது, ராகுல் காந்தி நடைப்பயணத்தில் எந்த எழுச்சியும் மக்கள் பார்க்கவில்லை.

திமுக அமைச்சர் கல்லெடுத்து எரிகிறார். பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மேடையில் தொண்டரை ஒரு அமைச்சர் அடிக்கிறார். பின்னர் நேற்று பிஜேபி இரண்டு வீடியோ வெளியிட்டது. திமுக இளங்கோ புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வெளியிட்ட வீடியோ கட் பண்ணாதது. அதில் கோவிலை இடிப்பதை பெருமையாக டி ஆர் பாலு பேசுகிறார்.

எ.வ வேலு மார்பிங் செய்ததாக சொல்கிறார். அவருக்கு நான் சேலஞ்ச் பண்ணுகிறேன். வீடியோ ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளலாம். கே என் நேரு மற்றொரு அமைச்சரை கேவலமாக பேசுகிறார். தாழ்த்தப்பட்டவர்கள் வந்தால் எப்படி பேசுகிறார்.

நாளை காலை தேர்தல் ஆணையத்திடம் பாஜகவினர் புட்டேஜ் கொடுக்கிறார்கள். அதை எடிட்டிங் என ப்ரூ பண்ணினால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். உண்மை என்றால் முதல்வர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எடிட் பண்ண வில்லை. பெருமையாக தம்பட்டம் தட்டினார் டி.ஆர்.

சேலத்தில் கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர் எப்படி தடுக்கப்பட்டார் என்பதை பார்த்தோம். திமுக காரரே தடுக்கின்றனர். கேட்டால் சமூக நீதி என்கின்றனர். திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச என்ன அருகதை உள்ளது.

போலீசார் மீது ஏன் எஸ்சி.எஸ்டி அட்ரா சிட்டி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யவில்லை. பட்டியலினத்தவர் கோவிலுக்குள் போக முடியாதா.? 30 நாள் ஆகியும் மலம் கலந்த வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாளையிலிருந்து வேட்பு மனு தாக்கல். ஓரிரு நாட்களில் அறிவிப்போம். நிற்கக்கூடிய வேட்பாளர் வலிமை பொருந்தியவராக இருந்து எதிர்க்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஸ்ட்ராங்கான வேட்பாளர் நிற்க வேண்டும். பாஜகவிற்கான தேர்தல் இது இல்லை. எங்களுக்கான தேர்தல் 2024. இந்த பட்ஜெட் தொழில்துறைக்கான பட்ஜெட். தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பட்ஜெட்.

பிபிசி ஆவணப்படம் யார் வேணாலும் போடட்டும். அது பொய் செய்தி. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முழுக்க பொய் என தெரிவித்துள்ளார்.

வேலையில்லாத நான்கு பேர் ஸ்கிரீனை போட்டு மக்களுக்கு காட்டுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்த பின்பு மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். குறை சொன்னவர்கள் எல்லாம் ஜெயிலில் உள்ளனர். தயவு செய்து திரையிடுங்கள். தியேட்டரில் போடுங்கள்.இது பிரபகண்டா மெட்டீரியல்.

பிபிசி இந்திய திருநாட்டை கலங்கப்படுத்துகிறது. நாங்கள் வீடியோவை தடுக்க திமுக கிடையாது. பார்க்க மக்கள் இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும்.

எ. வ.வேலு ஆடியோவை இல்லை என சொல்லட்டும். இது நேரு ,ஈவிகே எஸ் இருவரும் பேசும் ஆடியோ. தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

காஸ்ட் ஆர்பிட் ரேஞ்ச் , வெளியே இருந்து வரக்கூடியவர் குறைவான சம்பளத்தை வாங்கிக்கொண்டு வேலை செய்யும் பொழுது கிடைக்கிறது. இன்னும் 10 ஆண்டில் வட மாநிலத்தவர் வர மாட்டார்கள்.

பெங்களூரில் வெளியே போங்கள் என்று சொன்னால் நம்ம மக்கள் எங்கு போவார்கள். இன்னும் பத்து வருடத்தில் தமிழ்நாட்டில் வேலைக்கு ஆள் கிடைக்காது.

ராஜ்பவனில் முதல்வரும் ஆளுநரும் ஒன்றாக கம்பீரமாக நடந்து வந்தார்கள். முதல்வர் எங்கள் முதலமைச்சர் , தமிழ்நாட்டு முதலமைச்சர். கவர்னரும் முதல்வரும் சுமூகமாக இருக்கிறார்கள்.

விமர்சனம் செய்பவர்களை பார்த்துக் கொண்டிருந்தால் அரசியல் செய்ய முடியாது. தொண்டர்கள் ஆபாசமாக பேசக்கூடாது என இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளேன். நான் கமெண்டுக்கு பதில் சொன்னால் முழு நாளும் பதில் சொல்ல வேண்டும்.

கர்நாடகாவில் தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஸ்டடி பன்னி வரவேண்டும். ஒரு சென்ட் நிலத்தை நீங்களாக எடுத்து உள்ளீர்களா. கோர்ட் உத்தரவுபடி எடுத்துள்ளீர்கள்.

குலதெய்வ கோயிலுக்குள் இந்து சமய அறநிலை துறை போக நியாயம் இல்லை. இந்த விவகாரத்தில் மக்களுக்கு எழுச்சி வரப்போகுது. இந்தத் துறை வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

19 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

40 minutes ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

14 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.