ஜெயலலிதாவின் உண்மை மகள் நான்தான் : அந்த ஒரு காரணம்தான்… வாரிசு சான்றிதழ் கேட்ட பெண்ணால் ஆடிப்போன அதிகாரிகள்…!!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 4:51 pm

மதுரை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான மகள் நான்தான் எனக் கூறி, அதிகாரிகளை பெண் ஒருவர் அலறச் செய்த சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாகக் கூறி, ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

I am the real daughter of Jayalalithaa

இதனிடையே, ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி பலர் சர்ச்சையை கிளப்பினர். ஆனால், இந்த சர்ச்சை வெளியான சில நாட்களிலேயே உண்மையும் அம்பலமாகிவிடும். மேலும், ஜெயலலிதாவின் மகள் எனக் கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மகள் என்று மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறி, அதிகாரிகளை திடுக்கிட வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. எனது தாயார் பெயர் ஜெயலலிதா என்றும், அவர் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வந்ததாகவும், அவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகக் கூறி, ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் கேட்டு அவர் விண்ணப்பித்துள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அந்த வாரிசு சான்றிதழ் மனுவை நிராகரித்துள்ளனர்.

I am the real daughter of Jayalalithaa

இதனால், கோபமடைந்த அவர், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, தன்னை சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்து, காவல்துறை அதிகாரிகளிடம் இவர்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் எனக் கூறியதாவும் சொல்லி, அதிகாரிகளை அதிரச் செய்துள்ளார். மேலும், தான் கருப்பாக இருப்பதால் அதிகாரிகள் இந்த உண்மையை நம்ப மறுப்பதாகவும், நீதிமன்றம் சென்றாவது நான்தான் உண்மையான வாரிசு என்பதை நிரூபிப்பேன் எனக் கூறினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்று, இதுபோல சொல்லி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1714

    0

    0