மக்களை நம்புறவன் நான்.. யாருடனும் கூட்டணி இல்லை : என்னைக்குமே தனி தான்…. சீமான் பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 6:49 pm

மக்களை நம்புறவன் நான்.. யாருடனும் கூட்டணி இல்லை : என்னைக்குமே தனி தான்…. சீமான் பேட்டி!!

2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாத காலமே உள்ளதால் பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து உள்ளனர்.

ஏற்கனவே திமுக தங்கள் கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி அண்மையில் முறிந்து, அதிமுக தனி அணியாகவும், பாஜக தனி அணியாகவும் தங்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர், அதிமுகவுடன் , சீமானின் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்க உள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது. இது குறித்து அப்போதே பேசிய சீமான், இந்த செய்தியை திட்டவட்டமாக மறுத்தார்.

தற்போது இதே கேள்விக்கு மீண்டும் சீமான் பதில் கூறியுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூட்டணி குறித்து கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி கிடையாது. வழக்கம் போல மக்களை நம்பியே நாங்கள் தேர்தல் களம் காண உள்ளோம் என தெரிவித்தார்.

அடுத்து லியோ திரைப்பட விவகாரம் குறித்து பேசுகையில், இதுவரை இல்லாத அளவுக்கான நெருக்கடியை விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்திற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது. விஜய் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக கூறப்படுவதால் இந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்றும் சீமான் விமர்சனம் செய்தார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…