கடைசி நேரத்துல உங்க முகத்த பாக்க முடியாம போயிடுச்சே.. என்ன மன்னிச்சிருங்க : விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் உருக்கம்.. (வீடியோ)!!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலை 6.30 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜய்காந்த் உடலுக்கு அரசு மரியாதை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி, நாளை மாலை 4.30 மணியளவில், விஜயகாந்த் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் அமெரிக்காவில் இருந்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், இந்த கடினமான நேரத்தில் நான் உங்களோடு இருந்திருக்க வேண்டும், கடைசி நேரத்தில் உ ங்கள் முகத்தை பார்க்கமால் போய்விட்டேன்.
அமெரிக்காவுக்கு வந்தத என்னுடைய தவறுதான். ஒரு நடிகனாக நீங்க நிறையே பேரு வாங்கியிருக்கீங்க.. உங்க பேரும் புகழும் நீடிக்கும், என்னை மன்னித்து விடுங்கள், உங்க பக்கத்துல நான் இருந்திருக்கணும். உங்க ஆத்மா சாந்தியடையணும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தனுஷுடன் புதிய திரைப்படம் – அஸ்வத் உறுதி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது வெற்றிப் படமான டிராகன் திரைப்படத்திற்குப் பிறகு…
‘ராபின்ஹுட்’ படத்தில் வார்னரின் சிறப்புத் தோற்றம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்,இந்திய ரசிகர்களிடையே அதிக ஆதரவு பெற்றுள்ள ஒரு…
இயக்குநர் பேரரசு திருப்பாச்சி படம் இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சிவகாசி, திருப்பதி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி,…
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு நேர்ந்த கொடுமை! இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி,2021 டி20 உலகக் கோப்பைக்குப்…
பெருசு டைட்டில் படத்திற்கு சரியான தலைப்பு இயக்குனர் வைத்துள்ளார் என திருச்சியில் நடிகர் பாலசரவணன் கூறியுள்ளார். ஸ்டோன் பீச் பிலிம்ஸ்,…
தங்கக் கடத்தல் பின்னணியில் உள்ள சதி நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.