நான் எதிர்பாக்கல.. திமுகவுக்கு இனிமே தான் இருக்கு : அண்ணாமலை போட்ட ட்வீட்.. பரபரப்பில் தமிழகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 4:51 pm

சென்னையில் நேற்று கமலாலயத்தில் செய்தியாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களையும், திமுகவினர் சொத்து பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து, திமுகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களையும், பொதுமக்களையும் ஏமாற்றி இருக்கிறார் எனவும் கூறினர். இந்த நிலையில், இன்று முதல் திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம் என அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், நேற்றைய தினம் நான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் ரசீது, எனது வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு மற்றும் கல்விக் கடன் விவரங்களுடன், திமுகவினரால் குவிக்கப்பட்டுள்ள சொத்துக்களின் விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டிருந்தேன்.

அவற்றின் விவரங்கள் https://enmannenmakkal.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன். வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்துள்ளது என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன்.

எனது நியாயமான காரணங்களை விளக்கி, என் நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன். திசை மாறிச் சென்றுள்ள தமிழக அரசியலில், இதைத் தவிர, வேறு சரியான வழி எனக்குத் தெரியவில்லை.

தமிழகத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றமும், அரசியல்வாதிகளிடமிருந்து மக்கள் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும், திமுக போன்ற ஊழல் கட்சிகள் அதிகாரத்தில் இருக்கும் வரை சாத்தியமில்லை.

திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், அவர்கள் மக்களால், மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற பொறுப்பை இனியாவது உணர வேண்டும். எனவே, இன்று முதல், திமுகவிடம் தொடர்ந்து கேள்விகள் எழுப்புவோம்.

மக்களுக்கான எங்கள் கேள்விகளுக்கு உரிய பதில்களையும் திமுகவிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!