எனக்கு யாரோட தயவும் தேவையில்லை… அடைக்கலம் கேட்ட நித்தியானந்தாவுக்கு என்னாச்சு? பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 5:46 pm

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 447

    0

    0