நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 3ஆம் நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் 2ஆம் நாளாக நடைபெற்று வரும் கூட்டத்தில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
நேற்று புதிய நாடாளுமன்றத்தில் முதல் அலுவல் பணியாக பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாப்படி, மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதாகும்.
இந்த சட்ட மசோதாவானது 2026இல் மக்களவை தொகுதி மறுவரையறை செய்த பிறகு நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த மசோதா குறித்த விவாத்தின் போது காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறி காங்கிரஸ் எம்பி சோனியாகாந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அதன் பிறகு திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார். அவர் கூறுகையில், 1920ஆம் ஆண்டே பெண்களுக்கான உரிமைக்காக நீதிக்கட்சி போராடியது. 1927ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் எம்எல்ஏ தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் தான் இந்தியாவில் தேவதாசி முறையை ஒழித்தார்.
அதன் பிறகு சட்டமன்றம் , நாடளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு பெற 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1929ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை இயக்க போராட்டத்தை முன்னெடுத்தார். 1996ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அப்போதைய பிரதமர் தேவகவுடா திமுக ஆதரவோடு கொண்டு வந்தார்.
2010இல் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை எந்தவித கட்டுப்பாடுகள் இன்றியும் காங்கிரஸ் கூட்டணி கொண்டு வந்தது. 13 வருடங்கள் கழித்து தற்போது அந்த சட்டம் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது நான் மாநிலங்களவை எம்பியாக இருந்தேன். இப்போது மக்களவை எம்பியாக இருந்து கொண்டு மீண்டும் அதே சட்ட மசோதா குறித்து பேசி வருகிறேன்.
2014ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற கூறி மத்திய அரசை கேட்டுக்கொண்டார். அதன் பிறகு 2017இல் சோனியா காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த சட்டத்தை நிறைவேற்ற கோரி மத்திய அரசை வலியுறுத்தினர்.
அந்த சமயம் பாஜக எம்பிக்கள் ஹிந்தியில் கூச்சலிட்டனர். அப்போது கனிமொழி எம்பி, இந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது என ஆங்கிலத்தில் பதில் கூறி மீண்டும் பேச தொடங்கினார். அவர் மேலும் கூறுகையில், இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு தாமதம்.? ஏன் இதனை ரகசியமாக வைத்து இருந்து இப்போது தாக்கல் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் கனிமொழி குறிப்பிட்டார். அதில், 2024இல் வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு நாடகம். இந்த சட்டம் எப்போது அமல்படுத்தப்படும் தொகுதி வரையறை என கூறி ஏன் 2026 வரை தாமதமாகிறது என்பதை குறிப்பிட்டார்.
“பட்டங்கள் ஆள்வதும் , சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண் இங்கே இழைப்பில்லை பெண்ணே கும்மியடி”
என்று பாரதியார் பாடலையும் கூறி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டட மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி தனது கருத்துக்களை குறிப்பிட்டார்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.