எனக்கு பதவி ஆசையில்ல…ஆனா 2026ல் பாமக ஆட்சி தான் : பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி உற்சாகப் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 4:26 pm
PMK - Updatenews360
Quick Share

தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்..அப்போது அவர் கூறியதாவது..
தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், கல்லூரியில் ராக்கிங் செய்யப்பட்ட காரணத்தினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.

எனவே, ராக்கிங் செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் லாக்கப் டெத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, முறையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்,
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1057

    0

    0