தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார்.
விஜய்யின் ஸ்பீச் இந்த மாநாட்டில் அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. குறிப்பாக முதல் மாநாட்டிலே தனது பேச்சின் மூலம் விஜய் அரசியல் நம்பிக்கைகளை மக்களுக்கு ஏற்படுத்திருக்கிறார். இந்த மாநாட்டில் தங்கள் கட்சியின் செயல்களை விளக்கும்போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கான பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவேன் என அதை உறுதி செய்வதற்காக தனித்துறையும் உருவாக்குவேன் என தெரிவித்திருந்தார் .
இப்படியாக விஜய்யின் கொள்கைகள் மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. அப்போது உணர்ச்சிவசப்பட்டு பேசிய நடிகர் விஜய் அரசியலில் ஜெயிச்சவங்க தோத்தவங்க என அத்தனை பேர் பாடத்தையும் கற்று தெரிந்து தான் அரசியல் களத்தில் குதித்து இருக்கிறேன் பல பேரின் உந்துதலை ஊக்கமாக எடுத்துக் கொண்டு என்னுடைய கேரியரின் உச்சத்தை உதறி தள்ளிவிட்டு அந்த ஊதியத்தை உதறிவிட்டு உங்கள் விஜய்யா உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கேன்.
தமிழக வெற்றிக்கனம் தமிழகத்தில் புதிய திசையாகவும் விசையாகவும் மாறி அத்தனை அரசியல் அழுக்குகளையும் அடித்து துவைத்து நீக்கும். அதை எங்களது போக்கும் உங்களது வாக்கும் தீர்மானிக்கட்டும் என மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார். விஜய்யின் இந்த ஸ்பீச் மக்களின் கவனத்தை ஈர்த்து அவரது கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.