மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவில் இணைந்தேன்.. அண்ணாமலை விரும்பினால் தேர்தலில் போட்டி : A+ ரவுடி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 September 2023, 9:50 pm

மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவில் இணைந்தேன்.. அண்ணாமலை விரும்பினால் தேர்தலில் போட்டி : பிரபல ரவுடி பேட்டி!!

தமிழக பாஜக பட்டியல் அணி செயலாளராகநெடுங்குன்றம் சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார் இவர் மீது பல்வேறு வழக்குகள் ‌உள்ள நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கட்சிப் பணி வளர்ச்சி குறித்த செயல்பாடுகள் பிடித்திருந்தால் பாஜகவில் இணைந்துள்ளேன்.

பட்டியலின பிரிவு தலைவர் தடா பெரியசாமி மாநில அளவிலான பட்டியலணி செயலாளர் பதவி வழங்கியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உறுதுணையாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்து செயல்படுவோம்.

பல்வேறு வழக்குகள் இருக்கும் பொழுது கட்சிகள் இணைந்து உள்ளீர்கள் வழக்குகளின் நிலை எப்படி உள்ளது என கேட்டதற்கு…

என் மீது உள்ள பல வழக்குகளில் இருந்து விடுதலையும் பெற்றுள்ளேன் சில நிலுவையில் உள்ளது இன்றைய நிலவரப்படி வாரண்ட் உள்ள வழக்குகள் எதுவும் என்மீது இல்லை.

அதிலிருந்து சட்ட ரீதியாக சந்தித்து வெளியே வருவேன் கட்சி எனக்கு வழங்கிய பொறுப்பை மக்கள் என்னை பாராட்டும்படி செயல்படுவேன் மாநில தலைவர் அண்ணாமலை என்ன கூறுகிறாரோ அதை பொறுப்புடன் மேற்கொள்வேன் மக்களுக்கு என் மீது வேறு மாதிரியான கருத்துக்கள் இருக்கலாம் அந்த மாதிரியான பதட்டமான சூழ்நிலைக்கு மக்கள் செல்ல வேண்டாம்.

என்னை சார்ந்தவர்களும் அது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் அண்ணாமலையின் அரசியல் மீது ஈர்க்கப்பட்டு நிறைய இளைஞர்கள் இணைகிறார்கள் அதே போல் நானும் இணைந்துள்ளேன்.

என் பெயரை தவறாக பயன்படுத்துவார்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம் என் மீது தவறு இருந்தாலும் காவல்துறை என்னை அழைத்து விசாரிக்கலாம்.

என் பெயரை தவறாக பயன்படுத்துபவர்கள் இதன் பிறகு பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன் இன்று முதல் ஒரு எறும்பு செய்யும் வேலையை போல் நான் பாஜகவிற்காக வேலை மேற்கொள்வேன்.

ஏற்கனவே எங்கள் அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு சிறுசிறு பணிகளை செய்து வருகிறோம் காவல்துறையிடமும் இனிமேல் குற்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டேன் என தெளிவாக தெரிவித்துள்ளேன்.

என்னுடைய பெயர் காவல்துறைக்கோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் 100% செயல்படுவேன் நீதிமன்றத்திற்கு சரியாக சென்று வழக்குகளை ஆஜராகி அதிலிருந்து வெளியில் வரும் வேலையை பார்ப்பேன்.

பட்டியலின மக்களுக்கு எந்த அளவில் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்ல முடியுமோ அந்த அளவிற்கு என்னுடைய பணி இருக்கும் காவல்துறையின் அச்சுறுத்தலால் நான் பாஜகவில் இணையவில்லை.

எனது மனைவி ஏற்கனவே நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணை தலைவராகவும் உள்ளார் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பணிகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன் எந்த மக்களையும் சாதாரணமாக அணுகி பழகும் தன்மை கொண்டவராக அண்ணாமலை இருப்பதால் நாங்களும் அவருடன் இணைந்து செயல்பட உள்ளோம்.

ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் ஊழலுக்கு எதிராகவும் செயல்படுவேன் நானும் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறியவன் அதனால் கஷ்டங்களை பற்றி எனக்கும் தெரியும்.

அதற்கு ஏற்றார் போல் என்னை சார்ந்த மக்களையும் பட்டியலின மக்களின் வளர்ச்சி பாதையும் மேற்கொள்வேன் நாம் தனிப்பட்டு செயல்பட முடியாது கட்சியின் மேலிடம் என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு பணிகளை மேற்கொள்வேன்.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் கட்சிக்கான வளர்ச்சி பாதையில் என்னுடைய பணி இருக்கும்.

பத்திரிகையாளர்களும் நான் செய்யும் நல்ல பணிகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் ஒத்துழைப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

வன்முறையை நாடக்கூடாது வன்முறை தீர்வாகாது உங்களுக்கு என்ன அரசியல் நல்ல அரசியலாகவும் தெளிவாகவும் தெரிகிறதோ அந்த அரசியல் செய்யும் தலைவர் உடன் இளைஞர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

எனது பெயரை தவறாக பயன்படுத்தும் இளைஞர்களை காவல்துறையினர் களை எடுத்தால் சரியாகிவிடும் மிகப்பெரிய அரசியல் தலைவர்களை கேலிசித்திரம் செய்து வலைத்தளங்களில் கேலி செய்து வருகிறார்கள் என்னையும் கேலி செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என் பெயரையும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது அதை காவல்துறையினர் கண்டறிந்து தண்டித்து விட்டால் சரியாக விடும்.

பாஜகவில் இணைந்த பிறகு என்னுடைய வேலை சுத்தமானதாக இருக்கும் வன்முறை எதுவும் இருக்காது என் பெயரை யார் பயன்படுத்தினாலும் காவல்துறை அவர்களை களை எடுக்கலாம்.

காவல்துறையும் சும்மா இல்லை அவர்களும் அனைத்து துறைகளிலும் விசாரணை மேற்கொண்டு தெளிவாகவே பணிகளை மேற்கொள்கிறார்கள் தப்பு செய்பவர்களுக்கு தண்டனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

ரவுடிசத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது போதை அதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் அது அரசு மேற்கொண்டாலும் சரி தனியார் விற்பனை செய்தாலும் சரி அதை தடுக்க வேண்டும்.

இளைஞர்கள் யாரும் போதைக்கு அடிமை விடாதீர்கள் அதனால் தான் ரவுடியிசம் அதிகரிக்கிறது இது எல்லாம் படங்களில் பார்ப்பதற்கு தான் நன்றாக இருக்கும் படங்களில் கீழே விழுந்தாலும் கை கால் முறிவு ஏற்படுகிறது திரையில் வரும் வில்லன்களையே பொதுமக்கள் திட்டும் பொழுது நாம் பொதுமக்களிடையே அந்த ரவுடிசத்தை மேற்கொண்டால் நம்மை எவ்வளவு திட்டுவார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் அதெல்லாம் வேண்டாம் உழைப்பிற்கேற்ற ஊதியம் கண்டிப்பாக கிடைக்கும் அது இன்னைக்கு இல்லை என்றாலும் நாளைக்கு கண்டிப்பாக கிடைக்கும் அதை உணர்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் வேத சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பேட்டியின் போது உடனிருந்தனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 586

    0

    0