என் உருவத்தை பார்த்து மாணவராக உணர்கிறேன்…மக்களோடு மக்களாகவே இருக்க ஆசை : முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 April 2022, 10:21 pm

எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன் என தனியார் பள்ளி நிகழ்வில் முதல்வர் பேசினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற தனியார் பள்ளியின் 30ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எனக்கு மாணவர்களைப் பார்த்தாலே தனி உற்சாகம் பிறக்கும். எனக்கு வயதுதான் ஆகிறது, என் உருவத்தை பார்த்தால் மாணவரைப் போல தான் உணர்கிறேன்.

Image

வெறுப்புக்கும் பகைக்கும் இடமளிக்க கூடாது என்ற பண்பை பள்ளி காலத்திலேயே பெற வேண்டும். நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் என்று கூறும் நிலையை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

Image

மேலும் அவர் கூறுகையில், ஆட்சியில் அமர்ந்து 7-ஆம் தேதி வந்தால் ஒரு ஆண்டு ஆகப்போகிறது. அதனால் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டு வருகிறோம். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தாலும் மக்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 1042

    0

    0