மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இனி நான் அதை செய்ய மாட்டேன்.. பிரசாந்த் கிஷோர் வருத்தம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 10:55 am

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.

இதனிடையே பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்து கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது.

இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெற முடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் மற்றும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் கணிப்பு தவறாகியுள்ளது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம்.

ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என கூறியுள்ளார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 231

    0

    0