நான் இந்த தேர்தல்ல தோற்றிருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் தோற்கவில்லை : நம்பிக்கை கொடுத்த கோவை அதிமுக வேட்பாளர்!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2024, 7:40 pm

தான் இந்தத் தேர்தலில் தோற்று இருக்கலாம்,நான் இன்னும் தோற்று போகவில்லை – கோவை மக்களவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் உருக்கமான வீடியோ.

கோவை மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை தொடர்ந்து திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வருகிறார்.திமுக முதலிடத்திலும், பாஜக இரண்டாவது இடத்திலும் ,அதிமுக மூன்றாவது இடத்திலும், கோவை மக்களவை தொகுதி இருந்து வருகிறது.இதனிடையே கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் , வாக்களிக்காதவர்களுக்கும், ஜனநாயக கடமையையாற்றி மற்றவர்களுக்கு வாக்களித்த அனைத்துவாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

எடப்பாடி பழனிச்சாமிக்கும்,தன்னை பரிந்துரை செய்த எஸ்பி வேலுமணிக்கு அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி, பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தான் இந்தத் தேர்தலில் தோற்று இருக்கலாம், நான் இன்னும் தோற்று போகவில்லை.

என்னுடைய மக்கள் பணி தொடரும். என்னுடைய இ சேவை பணி முதலில் எப்படி வேலை செய்ததோ, அதேபோல் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ