I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக என்னை கூட அறிவிக்க வாய்ப்புள்ளது : பரபரப்பை கிளப்பிய தமிழக அரசியல் பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2023, 2:38 pm

I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக என்னை கூட அறிவிக்க வாய்ப்புள்ளது : பரபரப்பை கிளப்பிபய தமிழக அரசியல் பிரமுகர்!!

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்தான் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா என தேசிய ஜனநாயக கூட்டணியினர் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் பிரதமர் வேட்பாளர் குறித்து குஷ்பும் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மம்தா பானர்ஜியா, அரவிந்த் கெஜரிவாலா, நிதிஷ்குமாரா, சரத்பவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் சிறந்த பிரதமராக இருப்பார் என திமுக நிர்வாகிகள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டாத குறையாக பேசி வருகிறார்கள். அது போல் இந்தியா கூட்டணியில் உள்ள நிதிஷ், மம்தா உள்ளிட்டோருக்கு பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் ஒரு ஆர்வம் இருக்கிறது.

Mutharasan - Updatenews360

இந்த நிலையில் சிவகாசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இல்ல திருமண விழாவில் அதன் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அவர் பேசுகையில் இந்தியா கூட்டணியில் முடிவெடுத்தால் நான் கூட பிரதமராகலாம். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய அவசியமே இல்லை. நிச்சயம் பொருத்தமான ருவர் பிரதமராக வருவார். ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வு குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ள பொருத்தமற்றது என்றும் முத்தரசன் விமர்சித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லி வரும் நிலையில் முத்தரசன் நான் கூட பிரதமராகலாம் என கூறியுள்ளது, எந்த அளவுக்கு இந்தியா கூட்டணியில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்ற சுதந்திரம் உள்ளது என்பதை எடுத்துக் கூறவே அவர் அது போன்று கூறியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவில்தான் பிரதமர் மோடியை தவிர வேறு எந்த கூட்டணி கட்சித் தலைவரும் பிரதமராக முடியாது என்பதைத்தான் முத்தரசன் அவ்வாறு கூறியுள்ளார் என அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 423

    0

    0