10.5% விதையை போட்டது நான்… ராமதாஸ், அன்புமணி மீது கொதித்தெழுந்த வன்னியர் கூட்டமைப்புத் தலைவர்!!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2023, 8:43 pm
வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீடு 10.5 சதவீத விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, வன்னியர் கூட்டமைப்பு தலைவர் இராமமூர்த்தி, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 10.5 இட ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் மற்ற சமுதாயத்தினர் இதனை புரிந்து கொள்ளாமல் போராட்டங்கள் நடத்தினால், நமக்கும் இட ஒதுக்கீடு தருவதாக நினைத்து போராடி வருகின்றனர்.
ஆந்திராவில் இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தியதால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கபட்டது. குஜராத் போன்ற மாநிலங்களில் வலங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
காலதாமதம் செய்யாமல் தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை செயல்படுத்த வேண்டும். நாங்கள் அமைதியாகவும், ஜநனாயக முறையிலும் இந்த கோரிக்கையை கையால்கிறோம்.
10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை பற்றி இராமதாஸ் பேச கூடது. இதற்கான விதை நான் போட்டது. உலகம் முழுக்க வன்னியர் சமுதாயத்தின் பணம் மற்றும் அறக்கட்டளைகளை இராமதாஸ் உரிமை கொண்டாடி வருகிறார்.
பாமக குறிப்பிட்ட சில குழுவை வைத்துக்கொண்டு வன்னிய மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். வன்னியர் சொத்துக்களை தொடர்ந்து ஏமாற்றி பெயர் மாற்றம் செய்து வருகிறார் என குற்றம் சாட்டினார்.