திருப்தி இருந்தால் மட்டுமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பேன்…திமுகவின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை : ஆளுநர் ரவி!!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2022, 10:03 pm
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா ஆகிய மூன்று முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
அதில், கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொறுத்தவரை, விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும், விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஆளுநர் தரப்பு, பண மசோதா நீங்கலாக, வேறு எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவாக இருந்தாலும், கூட அதன் மீது ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கு எதிராக மக்களவையில் திமுகவினர் எழுப்பி வரும் குரல் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்.என்.ரவி, தனது பொறுப்பை தான் கவனித்து வருவதாகவும், திமுகவினரின் அரசியலுக்குள் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
0
0