டேய் மண்டைய உடைச்சுடுவேன், ராஸ்கல் : கேள்வி கேட்ட செய்தியாளரை ஒருமையில் திட்டி மிரட்டல் விடுத்த சீமான்..!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 9:47 pm

குடிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இடஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்வியில் ஆவேசமடைந்த சீமான், ”டேய் மண்டையை உடைத்து விடுவேண்டா ராஸ்கல்” என செய்தியாளர்களை ஒருமையில் பேசி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அந்த இடத்தில் இருந்து அந்த செய்தியாளர்கள் நகர்ந்து சென்றார். தொடர்ந்து பேசிய சீமான், என்ன மரியாதை கொடுத்து பேசற என ஆவேசமாக கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 529

    1

    0