யார் மனதையும் புண்படுத்த மாட்டேன்.. நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அளித்த உத்தரவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2024, 10:28 am

யார் மனதையும் புண்படுத்த மாட்டேன்.. நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அளித்த உத்தரவாதம்!!

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை போலீசார் கடுமையாக சித்ரவதை செய்து கை எலும்பை உடைத்து விட்டதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை ஏற்று நீதிமன்றம் கொடுத்த அனுமதியின் பேரில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மே 22ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: சசிகலாவுக்கு அதிமுக அளித்த ஷாக்… கொந்தளிக்கும் டிடிவி, ஓபிஎஸ்..!

காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!