தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் பாஜ.க ஆகிய கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே நிகழ்ச்சியில் தமிழகத்தில் முதல் 3 அரசியல் தலைவர்கள் பட்டியலில் நான் 3-வது இடத்தை பெற்றது உண்மையிலேயே வியப்பாக உள்ளது.
அந்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுவாக எனது கட்சி செயல்பாடுகள் குறித்த செய்தியை வெளியிடுவதில்லை. ஆனால் எனக்கும் 3-வது இடம் கொடுத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது இடத்தில் உள்ள நான் முதல் இடத்தை பெறுவது என்பது அதிக நாட்கள் அமையாது. அந்த நாட்கள் அமைவது நீங்கள் போடும் ஓட்டுக்களில் மட்டுமே உள்ளது. இன்று தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2-மாபெரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி பணத்தை வைத்து அதை மக்களிடம் கொடுத்து ஓட்டு பெற்று ஆட்சியை பிடிக்கிறது.
ஆனான் நாம் தமிழர் கட்சி அப்படி அல்ல. மக்களிடம் நேர்மையை விளக்கி ஓட்டுக்களை கடந்த தேர்தலில் பெற்றுள்ளோம். கடந்த தேர்தலில் 30 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளோம். இதே ஓட்டுக்கள் இன்னும் 3 மடங்கு அதிகரித்தால் நாம் தமிழர் கட்சி தான் அடுத்த ஆட்சியை அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அண்ணாமலை திமுக ஊழல் குறித்து பேசுகிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜக ஆட்சியில் பிரான்சில் இருந்து ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும் பொழுது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த கோப்புகள் காணாமல் போனது எப்படி?. நீரவ் மோடி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் போது 500 கோடி ரூபாயை பாஜகவுக்கு கொடுத்த பின்புதான் நாட்டை விட்டு நான் தப்பினேன் என்று கூறினார்.
நான் கிருஷ்ண பரமாத்மா பேரன். அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன். இலங்கையில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கை நாளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஜீயர்கள், திமுக அமைச்சர்கள் நடமாட முடியாது என்று பேசுவார்கள். அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் என் மீது எனது கட்சியினர் மீது வழக்குகளை போடுவார்கள்” இவ்வாறு தெரிவித்தார்.
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய…
This website uses cookies.