மறுபடியும் சொல்றேன்.. பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன் : மீண்டும் சீமான் காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 3:47 pm

சென்னை துறைமுகத்தில் உள்ள சீபேரர்ஸ் கிளப்பில் இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக 60 ஆம் ஆண்டு தேசிய கடலோர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய சீமான், பூமியை மண் என்று பார்க்காமல் தாயின் மடி என பார்க்க வேண்டும். பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல அனைத்து உயிரிகளுக்கும் சொந்தமானது என தெரிவித்தார்.

மேலும், கடைசியாக வந்த இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோல கடைசியாக வந்த மனிதன் ஆதிக்கம் செலுத்த பார்க்கின்றான். அனைத்தையும் அழிக்க பார்க்கின்றான்.

அதை நாம் விடமாட்டோம். மண்புழு செய்ததை போல் எந்த உயிரும் மண்ணிற்கு பயனை சேர்க்கவில்லை என்று கூறினார். கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலகத்தை சிதைந்து விட்டது.

கடல் தற்போது குப்பை மேடாக உள்ளது. அனைத்து கழிவுகள் கொட்டும் இடமாக உள்ளது. திருவள்ளுவருக்கும் சிலை கடலில் உள்ளதே என்கிறார்கள்.

இயற்கை பாறை வேறு செயற்கையாக உருவாக்கும் பாறை வேறு. செயற்கையாக உருவாக்கும் பாறைகளால் பல லட்சம் கடல் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். இப்போதும் சொல்கிறேன் கடலில் பேனா வைத்தால் நிச்சயம் உடைப்பேன் என பேசியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி