நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்… கெஜ்ரிவால் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு.. ராகுல் காந்தி பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2024, 7:31 pm

நான் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பேன்… கெஜ்ரிவால் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு.. ராகுல் காந்தி பேச்சு!

டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துள்ளது. டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகளில் 4-ல் ஆம் ஆத்மியும் 3-ல் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன். அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும் வாக்களிப்பார்.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற இரு கட்சி தொண்டர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அவர் வரமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் படிக்க: மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை.. அபாயத்திற்கான எச்சரிக்கை மணி : சொல்கிறார் தமிழக பாஜக துணை தலைவர்!

ஒருவேளை பிரதமர் தன் முன் வந்தால் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விவசாயப் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்பேன் என்று தெரிவித்தார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி என்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 255

    0

    0