ரூ.770 EMIக்காக மனைவியை சிறைபிடித்த IDFC வங்கி ஊழியர்… பதறியடித்துச் சென்ற கூலித் தொழிலாளி ; சேலத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
1 May 2024, 2:35 pm

சேலம் அருகே தவணை தொகையை செலுத்தாததால் கூலித் தொழிலாளியின் மனைவியி IDFC வங்கி சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் IDFC வங்கியில் ரூ.35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாரம் 770 ரூபாய் வீதம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தும் விதமாக இந்த கடன் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: ஜவுளிக்கடையில் புகுந்த கும்பல்… பெண்ணுக்கு பின்பு நின்றிருந்த நபர் செய்த காரியம் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

இந்த சூழலில், இந்த வாரக் கடனை வசூலிக்க வங்கி ஊழியர் பிரசாந்தின் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால், கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஆனதால், பிராந்த் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர் சுபா என்பவர், வீட்டில் பிரசாந்த் இல்லாததால், அவரது மனைவி கவுரி சங்கரியை, வங்கிக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, தவணைத் தொகையை செலுத்திவிட்டு உங்களின் கணவர் அழைத்துச் செல்லட்டும் என கவுரிசங்கரிடம் வங்கி ஊழியர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விவரம் அறிந்து வங்கிக்கு வந்த பிரசாந்த், 770 ரூபாய் தவணைத் தொகையை கட்டிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

இதனிடையே, பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட வங்கிக்கு வந்த போலீசார் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 10821

    0

    0