பாஜக, ஆர்எஸ்எஸ் முழு பைத்தியம் என்றால் திமுக அரை மெண்டல் : சீறும் சீமான்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 10:22 am

நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் நமக்கு உயிர். தமிழ் மாதத்தின் பெரிய இடையூறு இந்த சாதி மதம் தான். பிஜேபி, ஆர் எஸ் எஸ் முழு பைத்தியம், முழு பைத்தியத்தை நம்பலாம். திமுக அரை மெண்டல்.

திடீரென மாருத்துவர்கள், மீனவர்கள், மாணவர்கள் மீது பாசம் ஏனென்றால் திடீரென்று தேர்தல் வருகிறது. கட்டாயம் இந்தி படித்தால் தேசப்பற்று, கட்டாயம் தமிழ் படித்தால் தேச துரோகம். பிஜேபி, அதிமுக, திமுக, காங்கிரஸ் நான்கு பேரும் எனக்கு சம அளவு எதிரி தான்.

நீட்டிற்க்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தவர்கள் காங்கிரஸ், அதனை தற்போது மோடி வளர்க்கிறார். பிஜேபி, காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் இருந்தாலும் மேகதாதுவில் அரசியல் தான் செய்வார்கள். தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு தண்ணீரை பங்கிடு அப்போதுதான் தேர்தலில் காங்கிரஸ்க்கு பங்கீடு என்று முதல்வர் ஸ்டாலின் கூறட்டும்.

பாவியை வைத்துக்கொண்டு காவியை ஏன் எதிர்க்கிறாய். மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது. மத வழியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்று பாருங்கள். கல்வி என்பது மானுட உரிமை அதனை கொடுக்காமல் இருப்பது அரசின் கொடுமை.

யுவன் சங்கர் ராஜா இஸ்லாமியத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழர். மொழி சிறுபான்மை என்பது நீ, மத சிறுபான்மை என்பதை நிப்பாட்டு. மக்களை முழுமையாக நேசிப்பவன் நான், மக்களை கூட்டணியாக வைத்திருக்கிறேன். அதனால் தனித்து தான் நிற்பேன் என்றார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!