கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலடி எடுத்து வைத்தால் தமிழகத்துக்குள் திரும்பி வர முடியாது : அண்ணாமலை விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 12:39 pm

கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடியின் 9ம் ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் மாற்றத்திற்கான மாநாடு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் மக்களுக்கு இன்றையக்கு தான் தீபாவளி. தமிழக அரசியல் கெட்டு போக மையப்புள்ளி கரூர் என குறிப்பிட்டார்.

ஏனென்றால் ஒட்டுக்கு பணம் கொடுத்ததால் தேர்தல் நிறுத்தப்பட்ட வரலாறும் உள்ளதாக கூறினார். அதனால் தான் கரூரில் மாற்றத்திற்கான மாநாட்டை பாஜக நடத்துகிறது என கூறினார். பாஜகவை பார்த்தால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், கரூர் மாவட்ட ஆட்சியர் ,காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் திமுகவின் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சிக்கு வருவோம் என உறுதி பட தெரிவித்தார். இதற்காக கட்சி தொண்டர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது செந்தில்பாலாஜியை ஊழல் புகாரில் கைது செய்ய வேண்டும் என்று சொன்னவர். இப்போது கைது செய்யக்கூடாது என ஆதரவாக இருக்கிறார். முதலவருக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை, செந்தில்பாலாஜி மீது அதிக அக்கறை கொண்டவராக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இந்த வேகத்தை பொது மக்கள் பிரச்சனைக்கு காட்டவில்லையென குற்றம்சாட்டினார். தவறு செயவர்கள் யாராக இருந்தாலும் சிறைக்குள்ளே செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு முதல்வர் நம்பர் ஒன்னு என்று முதல்வர் சொல்லுகிறார், வேற யாரும் சொல்லவில்லை அவரே சொல்லுகிறார். ஆனால் தமிழகத்தில் பொறுத்த வரை திமுக அரசு சாராயம் ,மணல் கடத்தல், மதிய உணவில் அழுகிய முட்டை கொடுப்பதில் தான் நம்பர் ஒன் முதல்வர் என கூறினார்.

வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதில் நம்பர் 1 முதலவர் என விமர்சித்தார். ஒரே ஆண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் கோடி ஊழல் என்று நிதியமைச்சராக இருந்த பிடிஆர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரதமர் மோடி யுரியா தட்டுப்பாட்டை போக்கி வருகிறார். மோடி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக பணப்பலன்களை வழங்கி வருகிறார்.

தமிழகத்தில் 35 -45 வயது உடையவர் 17 சதவிகிதம் பேர் மதுக்கு அடிமையாக உள்ளனர். தமிழக அரசியலில் ஊழல் பெருத்துவிட்டது. 50 தேர்தல் வாக்குறுதி கூட இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

இந்த வருடம் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது என காங்கிரஸ் அமைச்சர் சொல்லுகிறார். எனவே பெங்களூரில் நடைபெறும் ஜூலை 11 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றால் முற்றுகையிடுவோம்.

முதல்வர் கூட்டத்திற்கு போக கூடாது, கூட்டத்திற்கு முதல்வர் சென்றால் தமிழகம் திரும்ப வர விடமாட்டோம். செல்லவில்லை என்றால் அவருடன் பாஜக துணை நிற்கும் என அண்ணாமலை தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 455

    0

    1