ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தில் இயங்கும் : பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2024, 6:29 pm

தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் பாமக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஏராளமானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழக முதல்வர் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மின்சாரத் துறையில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க வேண்டும். நேர்மையான திறமையான அதிகாரிகளே நியமனம் செய்து நல்ல நிர்வாகம் நடைபெற வேண்டும்.. தமிழ்நாட்டில் 85 சதவீதம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அவை இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன…

இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் நடைபெறாதது தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கடந்த 23 மாதத்தில் தமிழக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.. இதன் மூலமாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.. ஆனாலும் இவ்வளவு தொகை வந்த பிறகும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது… இவ்வளவு தொகை வந்த பிறகும் நஷ்டத்தில் ஏங்க காரணம் ஊழல்தான் காரணம்…

தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை 1-unit 3 ரூபாய் 40 பைசா; தமிழக அரசு தனியாரிடம் 11,500 மெகாவாட் மின்சாரத்தை பெறுகிறது அது 1-Unit 12 ரூபாய்… அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தனியாரிடமிருந்து தமிழக அரசு மின்சாரத்தை பெற்று வருகிறது…

தனியாரிடம் மின்சாரம் வாங்குவதன் மூலமாக கமிஷன் பெற்று ஊழல் நடைபெறுகிறது… இந்த ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தை இயங்கும்.. திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்கள் மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று ஆனால் தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை…

அதிமுக ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின் சொன்னார் மின்சார கட்டணம் ஷாக் அடிக்கிறது என்று ஆனால் தற்போது இவர்கள் மின் கட்டணத்தை ஏற்றி வருகிறார்கள், எனவே இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் மின் கட்டனத்தை திரும்பப்பெறும் வரை பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்..

மத்திய அரசு சொல்வதால் நாங்கள் மின் கட்டணத்தை ஏற்றியுள்ளோம் என தமிழக அரசு சொல்கிறது.. மத்திய அரசு சொல்வதை தமிழக முதலமைச்சர் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறாரா?.. இதற்கு மட்டும் மத்திய அரசு சொல்வதை நாங்கள் கேட்போம் மற்றதற்கு நாங்கள் கேட்க மாட்டோம் என சொல்கிறாராம் முதலமைச்சர்..
மக்களுக்கு சுமை கொடுக்கும் இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொள்ளலாமா?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பல கட்சிகள் மற்றும் பல மாநிலத்தை சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளதால் பிற்காலத்தில் இது போன்ற நிகழ்ஙுகள் நடைபைறாமல் இருக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்..

தமிழகத்தில் தடுப்பணைகள் கட்டி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தடுப்பணை கட்ட மறுக்கிறார்கள்.. அதேபோல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட மின்சார திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள் காரணம் தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றால் கமிஷன் கிடைக்கும்…

தி.முக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்ந்துள்ளது.. இது மக்கள் மீது திணிக்கின்ற மின்சார தீவிரவாதம்; விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது திமுக அல்ல திமுக அளித்த பணத்தால் வெற்றி பெற்றுள்ளனர், திமுகவின் கொள்கையாளோ பரப்புரையாலோ வெற்றி பெறவில்லை..

தமிழ்நாட்டில் 40800 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது ஆனால் 20000 மேற்பட்ட சந்து கடைகள் இருக்கிறது.. அந்த சந்து கடைகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது, சந்துக் கடைகளில் சாராயம் விற்பவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும் என்றார்.

  • anirudh music for village subject directing by tamizharasan pachaimuthu கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!