அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 25.5.2023 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உட்பட லைகா நிறுவனத்துக்குச் சொந்தமான எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 16ம் தேதி திடீரென சோதனை நடத்தியது. அதேபோல சென்னை எழும்பூரில் அமைந்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தொண்டு அறக்கட்டளை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனையடுத் இந்தச் சோதனையின் முடிவில், உதயநிதி அறக்கட்டளையின் சார்பில், வழக்கறிஞரை அழைத்து அமலாக்கத் துறை விளக்கங்களைப் பெற்றது.
இந்த நிலையில் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக திமுக தலைவர்கள் எனக்கு தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வரும் நிலையில், திமுக முதல் குடும்பத்தின் முறைகேடான சொத்துக்களை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
அஜித்-ஷாலினி ஜோடி அஜித்-ஷாலினி ஆகிய இருவரும் “அமர்க்களம்” திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். அப்போதே அவர்களுக்குள் காதல் பூத்தது. அதனை தொடர்ந்து…
கோவையில் நாளை மறுநாள் செட்டிபாளையம், எல்.என்.டி பைபாஸ் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டி கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவை தமிழர்…
உன் Goal என்ன? டாக்டர் ஆகவேண்டும், Engineer ஆக வேண்டும், வக்கீல் ஆகவேண்டும், முதல்வர் ஆகவேண்டும் என பலருக்கும் பல…
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.