ஜெயலலிதா இருந்திருந்தால் ராமர் கோவிலில் வழிபட்டிருப்பார்.. கரசேவகர்களை ஆதரித்தவர் : அதிமுகவை சீண்டும் தமிழிசை!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2024, 4:53 pm
சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா. குடமுழுக்கு , கர சேவகர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது , ராமர் கோயிலுக்காக தொண்டர்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பியவர் , ராமர் பாலம் போல பலவற்றை ஆதரித்தவர்.
ஜெ. இன்று இருந்திருந்தால் ராமர் கோயில் சென்று வழிபட்டுவிட்டு ராமர் கோயில் என்ற கனவு நனவாகியுள்ளதாக கூறியிருப்பார்.
இன்று இருக்கும் அதிமுக தலைவர்கள் அன்று ஜெ. கரசேவகர்களை ஆதரித்தபோது எதிர்க்காதது ஏன் ..? நாங்கள் ஜெ. வை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் .
பல ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஜெயலலிதா. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு நல்ல நேரம் பார்த்தவர். திமுகவினர் கூட ராகு காலம் , எமகண்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வதில்லை.
மேலும் படிக்க: ஜெயலலிதா ஆன்மீகவாதிதான்.. ஆனால் மதவெறி பிடித்தவர் அல்ல.. அண்ணாமலைக்கு காங்., மூத்த தலைவர் பதிலடி!
தென் சென்னை உட்பட அனைத்து தொகுதியிலும் திமுகவினர் போட்டிபோட்டு நல்ல நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுகவினர் பேசுவது போலி மதசார்பின்மை , நாங்கள் பேசுவதுதான் உண்மை என கூறினார்.