ராணுவத்தில் சேர்ந்தால்தான் தேசப்பற்று என்றால் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? சீமான் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 10:01 pm

அக்னிபாத் எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என சீமான் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் என்ற திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இந்த திட்டத்தை திரும்ப பெறுமாறு பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்க்கையில், நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ எனும் புதிய ஆள்சேர்ப்பு முறையானது நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

மேலும், அக்னிபத் திட்டம் மூலம் ஆர்.எஸ்.எஸ், பாஜக கொள்கையை இளைஞர்களுக்கு திணிக்க முயற்சி செய்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்தால்தான் தேசப்பற்று என்றால் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் ஏன் ராணுவத்தில் சேரவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!