மீண்டும் மோடி வந்தால் அமைதியான இந்தியா அமளியாகும்.. தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 7:18 pm

மீண்டும் மோடி வந்தால் அமைதியான இந்தியா அமளியாகும்.. தூத்துக்குடியில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்!!

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார். இதற்காக பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு முதல்வர் வந்தடைந்தார், அங்கிருந்து நெல்லை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிய அவர், தென்மாவட்ட வெள்ள பாதப்புக்கு நிவாரண நிதி தரவே இல்லை என குற்றச்சாட்டு வைத்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வென்றால் அமைதியான இந்திய நாடு அமளியாக மாறும் என பேசினார்.

  • Sundar C birthday celebration 2025மதகதராஜா பார்ட்டியில் லூட்டி அடித்த விஷால்…குடித்து கும்மாளம் போட்ட பிரபலங்கள்..!