மீண்டும் மோடி வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து.. RSS ஏவல் ஆட்கள் வந்தால் கழற்றி அடியுங்கள் : திருமா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 ஏப்ரல் 2024, 2:44 மணி
Arun Nehru
Quick Share

மீண்டும் மோடி வந்தால் சிறுபான்மையினருக்கு ஆபத்து.. RSS ஏவல் ஆட்கள் வந்தால் கழற்றி அடியுங்கள் : திருமா ஆவேசம்!

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், அருண் நேரு நாடாளுமன்ற உறுப்பினராக டெல்லி செல்ல வேண்டும். இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. வாழ்வுரிமைக்கான போர். இந்தியா கூட்டணியை உருவாக்க ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை நாடு அறியும்.

மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதால் தான் வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார் ஆனால் இன்று கோடிக்கணக்கானோர் வேலையின்றி இருக்கிறார்கள்.

கருப்பு பணத்தை மீட்டு 15 இலட்சம் கொடுப்பேன் என்றார் ஆனால் எதுவும் செய்யவில்லை. கலைஞர் ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றலாம் என மோடி திட்டமிட்டு பல முறை‌ தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.

மோடியின் ஆட்சியில் நாடு வளரவில்லை. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதானி மற்றும் அம்பானி மட்டுமே வளர்ச்சிடைந்துள்ளனர்.

ஒரு சாதாரண ஒப்பந்ததாராக இருந்த அதானி இன்று உலகப்பணக்காரர்கள் வரிசையில் 4 வதாக இருக்கிறார். மோடி பிரதமரானால் ரேசன் கடை இருக்காது, இட ஒதுக்கீடுகள் இருக்காது, 100 நாள்‌ வேலைவாய்ப்புத்திட்டம் இருக்காது. சாதி – மத சண்டைகள்‌ தான் இருக்கும்.‌

அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை ஏவி தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் 6500 கோடி ரூபாயை பணம் பறித்துள்ளனர் பாஜக.

இவர்களை அகற்றத்தான் ராகுல்- ஸ்டாலின், மம்தா அரவிந்த் கெஜ்ரிவால் கைக்கொத்துள்ளனர். மோடி மீண்டும் பிரதமரானால் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்திற்கு ஆபத்து.

மோடி பிரதமரானால் சிறுபான்மையினருக்கு ஆபத்து, அவர்கள் வழிபாடு தலங்கள் உடைக்கப்படும். ஆர்.எஸ்.எஸ். ஏவல் ஆட்கள் ஒடுக்கப்பட்டோரிடம் வருவார்கள் அவர்களை கலற்றி அடியுங்கள் என ஆவேசமாக பேசினார்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 235

    0

    0