பிரதமர் மோடி கட்டளையிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.. நிச்சயம் நடக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2024, 7:26 pm

பிரதமர் மோடி கட்டளையிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.. நிச்சயம் நடக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால் நிரந்தர சின்னம் கிடைத்திருக்கும். முறையாக விண்ணப்பிக்காமல் சின்னம் கிடைக்கவில்லை என்றால், அது யாரின் தவறு?. ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்தே பெற வேண்டும், அதை சீமான் செய்யவில்லை.

சீமானை விண்ணப்பிக்க விடாமல் நான் தடுத்தேனா?. இவ்வளவு காலமாக தேர்தலில் போட்டியிட்டும், ஏன் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறவில்லை என நீதிமன்றமே கேட்டுள்ளது. விண்ணப்பம் செய்யாமல் சின்னத்தை கேட்டால் எப்படி தருவார்கள்?. நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காததற்கும், பா.ஜ.க.விற்கும் என்ன சம்பந்தம்?. மூத்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முழு அதிகாரம் உண்டு. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களை குறித்தும் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் நான் போட்டியிட போவதாக எங்கும் சொல்லவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான பணிகளை மட்டும் மேற்கொள்வேன். நான் போட்டியிடுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி என்ன ஆணையிட்டாலும் கேட்பேன்.

போதைப்பொருள் சம்பவத்தில் காவல்துறை கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் வழக்கில் கைதானோரை காவல்துறை கண்காணிக்காததே பிரச்சினை. 11 ஆண்டுகளுக்கு முன் கைதான ஜாபர் சாதிக்கை காவல்துறை ஏன் கண்காணிக்கவில்லை?. போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உயர் அதிகாரிகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!