வரி ஏய்ப்பு நடந்தது உறுதியானால் நடவடிக்கை எடுங்க… NO PROBLEM : அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2023, 10:06 pm

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் 2-வது நாளாக இன்று சோதனையில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது, வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக எனது உறவினர்கள், நண்பர்கள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் சோதனை நடத்தியுள்ளனர்.

இதில் பல தொழில் நிறுவனங்கள் நான் பள்ளிக்கல்வி முடிப்பதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை ஆகும். அவர்கள் அனைவரும் வருமான வரியை முழுவதுமாக செலுத்திக் கொண்டு இருப்பவர்கள்.

ஏற்கனவே நான் கூறியது போல், ஏதேனும் வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த சோதனைகள் இன்னும் ஓரிரு நாட்கள் நடைபெறும் என்று கூறுகிறார்கள். அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்ற பிறகு செய்தியாளர்களை மீண்டும் சந்தித்து விளக்கமளிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ