திமுக அரசு தப்பிக்கணும்னா இத மட்டும் பண்ணுங்க.. இல்லனா ஆட்சி கலைந்துவிடும் : ஹெச்.ராஜா எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
12 January 2023, 8:23 pm

திருச்சியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அக்கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் சட்டசபையில் ஆற்றிய உரையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக தெரவித்துள்ளார்.

இதற்கு ஸ்டாலின், ஆளுநருக்கு நன்றி சொல்லவேண்டும். தமிழகத்தில் குண்டுவெடிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, கஞ்சா விற்பனை நடைபெறும் நிலையில், ஆளுநரின் உரைக்கு முதல்வர் நன்றி தெரிவித்திருக்க வேண்டும்.

தமிழகம் அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கர்நாடகாவும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவும் தான் அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன. இதுபோன் பொய்யான தகவல்களைத் தான் ஆளுநர் தனது உரையில் தவிர்த்திருக்கிறார்.

மேலும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட உரையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆளுநர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆனால், அவை அச்சகத்திற்கு சென்றுவிட்டன. தாங்கள் விரும்பும் திருத்தங்களை தாங்களே மேற்கொள்ளுமாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தான் ஆளுநர் தனது உரையில் மாற்றம் செய்து கொண்டார். ஆளுநரை தொடர்ந்து விமர்சிப்பதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக் கொண்டால், சட்டமன்றம் கலைக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 400

    0

    0