உதயநிதி துணை முதல்வரானால்.. திமுக செய்யும் குற்றங்கள் DOUBLE ஆகும்.. மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2024, 11:40 am

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 20ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது… இந்நிலையில், ஒண்டிவீரன் மணிமண்டபம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.. இந்நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துவதற்காக தகவல் ஒளிபரப்புத்துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்…

அப்போது தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில், பாரத பிரதமர் மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க, மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்து இருக்கின்றார்.. ஏழை, எளிய மக்களுக்கு அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் மூன்று கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் கொடுத்துள்ளார்.. இரண்டாவது கையெழுத்தாக 20,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு சன்மான ரூபாய் ஒதுக்கி இருக்கின்றார்.. நாட்டின் வளர்ச்சி பாதை 2047ல் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் என்று மோடி இந்த நாட்டை வேகமாக வளர்ச்சி பாதையில் எடுத்து கொண்டு செல்கின்றார்…குலசேகரன்ப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலத்திற்கு 1,800 கோடி ரூபாய் கொடுத்து இருந்தார்கள்… அதேபோல தூத்துக்குடி வஉ சிதம்பரனார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியை தொடங்கி வைத்துள்ளார்..

தூத்துக்குடி மாநகராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது… மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்திக் கொண்டிருக்கின்றோம்… தூத்துக்குடி விமான நிலையத்தில் விரிவாக்க பணியானது ஓடுதளம் 3 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.. சென்னையை விட இதுதான் அதிகம், இதனால் அதிக விமானங்கள் தரை இறங்க கூடும். ஆகவே, மத்திய அரசு இப்பகுதியில் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறது….

மேலும், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு? இந்த சம்பவம் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.. மாநில அரசாங்கம் கடுமையாக தண்டனைகளை பெற்றுத் தர வேண்டும்.. மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை மாநில அரசு எடுக்காததால் சிபிஐ போன்ற விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.. மாநில அரசாங்கம் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்…

கலைஞர் நாணய வெளியீட்டு விழா அரசாங்க விழா, இது அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு, உதயநிதி துணை முதல்வரானால் தமிழ்நாட்டிற்கு திமுகவால் ஒன்றும் மாற போவது இல்லை.. தமிழ்நாடு அரசாங்கம், தமிழக அமைச்சர்கள் மக்களுக்கு என்ன தீங்கு செய்து கொண்டிருக்கிறார்களோ அது இரட்டிப்பாகும் என்றார்..

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!